1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (08:51 IST)

தொடங்கியது தென்மேற்குப் பருவமழை – ஜூன் 10-ல் ரெட் அலர்ட் !

கேரள மாநிலத்தில் இன்று தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில் ஜூன் 10 ஆம் தேதி கேரளாவின் சிலப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று தென் மேற்குப் பருவ மழைத் தொடங்கியுள்ளதாக் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மழை அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழைப்பொழிவு இருக்குமென்று கூறப்படுகிறது.

தென் மேற்குப் பருவமழைக் காரணமாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ‘தென்மேற்குப் பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் வரும்  10, 11 ஆகிய தேதிகளில் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமானப் பெருமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அம்மாவட்டங்களுக்கு  குறிப்பிட்ட தேதிகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.