தென்மேற்கு பருவமழை எப்போது ? வானிலை மையம் புதுத்தகவல்
தென்மேற்கு பருவமழை அடுத்த மூன்று நாட்களில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அந்தமான் நிகோபார் தீவுகளில் பலத்த மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவ மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் தெற்கு வங்கக்க்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் போன்ற இடங்களில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இப்பருவமழை தொடங்குவதற்குச் ஏற்ற சூழல் மே 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நிலவும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் மூன்று நாட்களில் தொடங்கும் என்று தற்போது தகவல் வெளியாகிறது