ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2024 (19:13 IST)

இன்றைய ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் vs பெங்களூரு.. டாஸ் வென்றது யார்? அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

rr vs rcb

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.
 
ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்

இதையடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூரு 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பதால் அந்த அணிக்கு இன்று கட்டாய வெற்றி தேவை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளில் விளையாடும் வீரர்கள் குறித்த முழு தகவல் இதோ:

ராஜஸ்தா: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜுரல், ஹெட்மயர், அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், பர்கர், யுவேந்திர சாஹல்

பெங்களூரு: விராட் கோஹ்லி, டூ பிளஸ்சிஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், சவுரவ் சௌஹான், டாப்லே, மயங்க் டாகர், சிராஜ், யாஷ் தயல்,

Edited by Siva