தமிழகத்தின் அடுத்த அம்மா மோடி - தமிழசை அடடா விளக்கம்
தமிழகத்தின் அடுத்த அம்மா மோடிதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை “காங்கிரஸ் கட்சியில் சமையல் எரியாவு விலை அதிகமாக இருந்தது. அதேபோல் சிலிண்டர் புக் செய்து விட்டு காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது புக் செய்த உடன் கேஸ் சிலிண்டர் வீட்டிற்கு வந்துவிடுகிறது. மேலும், கேஸ் விலை ரூ.500 குறைந்துள்ளது.
பாஜகவின் பிடியில் தமிழகம் இருப்பதாக கூறுவது தவறான ஒன்று. மத்திய அரசோடு இணைந்து போகும் போது மாநில அரசின் திட்டங்கள் விரைவில் நிறைவேறும். ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தமிழகத்திற்கு தேவையனவற்றை பிரதமர் மோடி செய்து வருகிறார். அதனால், தமிழகத்தின் அடுத்த அம்மா அவர்தான்” என அவர் பேசினார்.