தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
- இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையில் இடியுடன் மழை: வானிலை அறிவிப்பு!
- சென்னை அண்ணாசாலையில் திடீரென வெடித்த சொகுசு கார்: பெரும் பரபரப்பு
- பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த சென்னை வாலிபர்: தீவிர விசாரணை!
- சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?
சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேச தடை?
சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்துக்கழகம் பரிந்துரை.
தமிழக அரசின் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மாநிலத்தின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பலர் செல்போன்களில் சத்தமாக பேசுவதும், சத்தமாக பாடல்கள் வைத்து கேட்பதும் சக பயணிகளுக்கு பொதுவாகவே இடையூறு ஏற்படுத்தும்.
இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேசுவதற்கு தடை விதிக்க போக்குவரத்துக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அனுப்பியுள்ளது. பேருந்துகளில் பாடல் கேட்பது, வீடியோ கேம் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கேரள போக்குவரத்து கழகம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பேருந்துகளில் சத்தமாக பேசுவது, பாடல் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
