1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. luxury car fired in chennai anna salai

சென்னை அண்ணாசாலையில் திடீரென வெடித்த சொகுசு கார்: பெரும் பரபரப்பு

car fire
சென்னை அண்ணாசாலையில் திடீரென வெடித்த சொகுசு கார்: பெரும் பரபரப்பு
சென்னை அண்ணா சாலையில் திடீரென சொகுசு கார் ஒன்று வெடித்து சிதறியது  முழுவதுமாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை அண்ணா சாலையில் இன்று சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன் என்பவரின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காரில் சென்று கொண்டிருந்த தொழிலதிபர் கணேசன் என்பவர் 60 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கார் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விட்டது என்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை அண்ணாசாலையில் திடீரென சொகுசு கார் வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்
வலுவான எதிர்க்கட்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன்: பிரதமர் மோடி