1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (09:55 IST)

ஓபிஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? – வழக்கு இன்று விசாரணை!

EPS & OPS

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 2017ல் நடைபெற்றபோது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் 11 உறுப்பினர்கள் மீது சட்டப்பேரவை தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை அதனால் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என்று கூறி தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.

2017 நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.