1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 8 ஜூலை 2018 (13:02 IST)

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். 
 
இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
கடந்த மாதம் 14-ந்தேதி 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கை விசாரித்த உயர்நீதமன்ற நீதிபதி இந்திராபானர்ஜி 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றார். ஆனால் நீதிபதி சுந்தர் சபாநாயகர் தனபாலின் தகுதி நீக்க உத்தரவு செல்லாது என தெரிவித்திருந்தார். மேலும் சபாநாயகரின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார் நீதிபதி சுந்தர். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரின் தீர்ப்பு அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.  
இதனையடுத்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் 3 வது நீதிபதியாக சத்தியநாராயணா என்பவரை நியமித்தது. இவ்வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா வரும் 23-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்ப்படும் என்றார். 
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த இரண்டாம் நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனையடுத்து அவரின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடிதத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.