1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (16:01 IST)

பாஜகவினர் அறிவில்லாதவர்கள் - பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பாஜக கட்சியினரை குறித்து இழிவாக பேசிய முக தலைவர் ஸ்டாலின்!
 
தமிழகம் முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
அந்த பரப்புரையில்  பேசிய அவர், எங்கள் தமிழ் மக்கள் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்ற புரிதலோடு இருப்பவர்கள். இதனை புரிந்துகொள்ள பாஜகவிற்கு இன்னும் நூறு வருடம் ஆகும். அறிவில்லாதவர்கள் அவர்கள் என பேசியுள்ளார். இதனிடையே திருவண்ணாமலை தொகுதி தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலு வீடு, அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் புகுந்து சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது