1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. West Bengal BJp candidate photo trending

அட இருங்கப்பா குளிச்சிட்டு வறேன்..! குளிக்கும் நபரிடம் ஓட்டு கேட்ட வேட்பாளர்!

West Bengal
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் ஒருவர் குளிக்கும் நபரிடம் வாக்கு சேகரித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் மேற்கு வங்கம் கராக்புர் சாதர் பகுதியில் போட்டியிடும் ஹிரன் சேட்டர்ஜி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நடந்தே சென்று எளிய மக்களுடன் உரையாடி வாக்கு சேகரித்து வரும் அவர் சமீபத்தில் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரிடம் வாக்கு சேகரித்ததுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு டோக்கன்: திமுக குற்றச்சாட்டு!