செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (09:37 IST)

கருத்துக்கணிப்பினால் அசால்ட்டா இருக்க வேண்டாம்! – ஸ்டாலின் அறிவுறுத்தல்

கருத்துக்கணிப்புகள் தேர்தல் வெற்றியை உறுதி செய்தாலும் தோழமைகள் அலட்சியம் காட்ட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதில் அதிகமான கருத்துக்கணிப்புகளில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்கள் திமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த விரிவான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “கருத்துக்கணிப்புகள் நம் வெற்றியை உறுதி செய்தாலும் அதீத எண்ணம் துளியும் வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். எனவே அலட்சியமின்றி களப்பணியாற்றுவோம். ஒவ்வொருவரையும் கவனிக்கிறேன்! தோழமைகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். முழு வெற்றியைச் சிதறாமல் அறுவடை செய்வோம்!” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.