ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (23:17 IST)

''வலிமை'' பட update கேட்டிருக்கும் ரசிகர்களுக்கு..அஜித் மேலாளர் அறிவிப்பு...

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குநர் போனி கபூர் தயாரித்துவருகிறார். இப்படத்தின் அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், அஜித்தின் மேலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில்,

படப்பிடிப்பினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு. அஜித்குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை படம் அப்டேட் குறித்து உரிய முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் , அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.