திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (21:27 IST)

பாடகர் எஸ்.பி.பியின் நினைவாக இசைவனம்...பிரபல நடிகர் துவக்கி வைத்தார் !

இந்திய சினிமாவில் முன்னணிப் பாடகராகவும், நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் கோலோட்சியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சமீபத்தில் இவர் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதிலிருந்து எஸ்.பி.பி குடும்பத்தினர் முதல் பலரும்  மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பின் நினைவாக கோவையில் இசை வனம் அமைக்கப்பட்டுள்ளது.

பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் சார்பில் 74 மரக் கன்றுகள் நடவு செய்யும் பணியை நடிகர் விவேக் துவக்கி வைத்துள்ளார். இங்கு வளரும் மரத்தில் இருந்து இசைக்கருவிகள் தயாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.