வியாழன், 9 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (17:18 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சிறப்பு கவுரவம் !

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சிறப்பு கவுரவம் !
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலினை அழைத்து வருவதற்கு தன் சிறப்பு புல்லட் புரூப் காரை பிரதமர் மோடி அனுப்பி சிறப்பு செய்துள்ளார் .

தமிழக எம்பி டி.ஆர். பாலு, முதல்வர் ஸ்டாலின் உடனிருந்து அவரது பயணத்தை ஒருங்கிணைத்து வரும் நிலையில்,  ஸ்டாலினுக்கு பிரதமர் செய்துள்ள சிறப்பு கவுரம் இதற்கு முன் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும், ஜெயலிதா ஆகிய இருவருக்கும்தான் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற பின் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதன் முறையாகும். எனவே இந்தச் சந்திப்பில் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது, கொரொனா தடுப்பூசி உள்ளிட்டவற்றைக் குறித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.