திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (16:01 IST)

புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார் 
 
கல்வி வேலைவாய்ப்பு சமூக பொறுப்புகள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்யவேண்டும் என்றும் அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்கவும், போலி அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்தாண்டு காலத்தில் இலக்குகளை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்