1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (16:38 IST)

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; சுத்தமான உணவு பொருட்கள்! – கலெக்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுள்ள புதிய ஐஏஎஸ் அதிகாரிகளோடு மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று புதிய ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல வலியுறுத்தல்களை முன்வைத்துள்ளார்.

அதன்படி, மாவட்டம்தோறும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்

அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்கவும், போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 ஆண்டுகளில் 7 இலக்குகளை எட்டிட மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அவசியம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.