10 லட்ச மரணங்கள் - பாதிக்கப்பட்ட 10 நாடுகள்: இந்தியாவின் நிலை என்ன?
கொரோனாவால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போதைய தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதேபோல கொரோனா மரண எண்ணிக்கையும் அதிகரித்து வரும் சூழலில் கொரோனாவால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான மரணம் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக உயிரிழப்பை சந்தித்த 10 நாடுகளின் பட்டியல்:
1. அமெரிக்கா - 2,10,785
2. பிரேசில் - 1,43,010
3. இந்தியா - 96,318
4. மெக்சிகோ - 76,603
5, இங்கிலாந்து - 42,072
6. இத்தாலி - 35,875
7. பெரு - 32,396
8. பிரான்ஸ் - 31,893
9. ஸ்பெயின் - 31,614
10. ஈரான் - 25,986