திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (13:24 IST)

மாணவிகளுக்கு கொடுப்பது இலவசம் அல்ல.. இது கடமை! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரசு பள்ளி மாணவிகளுக்கு “புதுமைப்பெண் திட்டம்” தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அரசின் கடமை என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த, தற்போது இளங்கலை, முதுகலை படிப்புகளில் பயின்று வரும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற தகுதியானவர்கள். வேறு உதவித்தொகை பெறுபவர்களாக இருந்தாலும் இந்த உதவித் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ”புதுமை பெண் திட்டம்” இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அரசு பள்ளி மாணவிகள் 12ம் வகுப்புடன் இடைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டு அவர்கள் உயர்கல்வி பெற இந்த உதவித்தொகை உதவும். இதனால் தமிழகத்தில் பெண் கல்வி சதவீதம அதிகரிக்கும்.

அரசு பள்ளி மாணவிகளுக்கான இந்த உதவித்தொகை இலவசம் அல்ல. இது தமிழக அரசின் கடமை. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் மெய்நிகர் வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பணம் இருப்பவருக்கு ஒரு கல்வி, இல்லாதவருக்கு ஒரு கல்வி என்ற நிலையை தமிழக அரசு போக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.