அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 திட்டம்! – வியந்து பாராட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்!
தமிழக அரசின் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த, தற்போது இளங்கலை, முதுகலை படிப்புகளில் பயின்று வரும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற தகுதியானவர்கள். வேறு உதவித்தொகை பெறுபவர்களாக இருந்தாலும் இந்த உதவித் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ”புதுமை பெண் திட்டம்” இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து வரவேற்பு மற்றும் பாராட்டு தெரிவித்து பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.