தொடர்புடைய செய்திகள்
- சத்தமா சிரிச்சுடுங்க Come-on.... கணவருடன் "வாத்தி கம்மிங்" நடனமாடும் ஆர்த்தி!
- சென்னை டூ தூத்துக்குடி! திருமணத்திற்கு சென்ற மணமக்கள் மருத்துவமனையில் அனுமதி!
- கொரோனா வைரஸ்: ஊரடங்கு நிலைக்கு பிந்தைய மனக்கலக்கத்தை எதிர்கொள்வது எப்படி?
- பொய் செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! – திருப்பத்தூர் போலீஸ் எச்சரிக்கை!
- கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆகுமா? – அதிர்ச்சியளிக்கும் பில்கேட்ஸ்
ஊரடங்கே ஒட்டுமொத்த தீர்வல்ல! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையாத சூழல் நீடிக்கும் நிலையில் ஊரடங்கு மூன்றாம் கட்டமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருக்க வேண்டியது மக்களின் கடமை. மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஊரடங்கு என்பது கொரோனா பரவலை தடுக்க ஒரு தொடக்கம்தான். அதனால் ஊரடங்கே தீர்வாகாது. ஊரடங்கை நீடித்துக்கொண்டே போவதோடு அரசின் பணி முடிந்து விடுவதில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
