1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin says it’s a time to change

ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; இது ஒரு ஜனநாயக போர்! – மு.க.ஸ்டாலின்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் இது ஒரு ஜனநாயக போர் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக முன்னதாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில் தற்போது திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின், காட்பாடியில் துரைமுருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் “கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மார்ச் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். இது ஆட்சி மாற்றத்திற்கான நேரம் மட்டுமல்ல. இது ஒரு ஜனநாயக போர்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
திமுக வேட்பாளர்கள் முழு விபரம் இதோ: 13 பெண்களுக்கு வாய்ப்பு!