ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (21:22 IST)

நாடாளுமன்றத்தில் நீட் பிரச்னையை எழுப்புவோம்: மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வால் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒருசில உயிர்கள் இழந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் இரண்டு மாணவிகள் பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்ற குரல் மேலும் வலுத்து வருகிறது
 
நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற அதிமுக அரசு எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய பாஜக அரசு உடனடியாக ஒப்புதல் பெற்று தர வேண்டும் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் நீட் பிரச்னையை நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி உரிய தீர்வு காண திமுக முயற்சிக்கும் என்றும், எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் பிரச்னையை திமுக எம்.பி.க்கள் எழுப்புவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தற்கொலைகளை இன்னமும் அமைதியாக மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்