புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (13:58 IST)

கருணாநிதி போல் ஸ்டாலின் இருக்க மாட்டார் - தமிழிசை

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 350 க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்கிற ஆதங்கம் பாஜக தலைவர்கள்  மற்றும் தொண்டர்களிடையே இருந்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.
இத்தனைக்கும் அதிமுக உடன் கூட்டணி அமைத்தும் மெகா கூட்டணி பெரிய அளவில் சோபிக்காததுதான் அரசியல் விமர்சகர்களிடையே பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவை விமர்சனம் செய்தார்.
 
அவர் கூறியதாவது :
 
திமுக கட்சி ஒரு மதத்துக்கு ஆதரவாகவும் மற்றொரு மதத்துக்கு எதிராகவும் பேசி வருகிறது. தற்போது மத்திய அரசு எம்மொழியையும் கட்டாயம் திணிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ள போதிலும் கூட, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள்  மத்திய அரசு இந்தியை திணிப்பதாகக் பேசி வருவதாகக் கூறினார்.
 
மேலும் திமுக தலைவர் ஸ்டாலுன் கருணாநிதியின் இடத்தை பிரதிபலிக்கமாட்டார் என்று விமர்சனம் செய்தார்.
 
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக 37 தொகுதிகளில்  வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.