திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (12:58 IST)

உள்ளாட்சியிலும் நல்லாட்சி வேண்டுமா? ஸ்டாலின் சொல்வது என்ன?

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்ட மக்கள் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட மக்களும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரியுள்ளார். 
 
மேலும், நாங்கள் மக்களுக்காகவே சிந்திக்கிறோம், மக்களுக்காகவே செயல்படுகிறோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.