மத்திய அரசு ஒரு அமௌண்ட் சொல்றாங்க; நீங்க ஒன்னு சொல்றீங்க! – மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நிதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் இருவேறு தொகைகளை கூறி குழப்புவதாக மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ உபகரணங்கள் வாங்க மத்திய அரசியம் 3 ஆயிரம் கோடி தமிழக முதல்வர் கோரியிருந்தார். ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு 6600 கோடி ரூபாய் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேள்வியெழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு ரூ.6600 கோடி மருத்து உபகரணங்கள் வாங்க அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அதிகாரிகள் மருத்துவ பொருட்களுக்கு ஆன செலவு ரூ.1500 கோடிதான் இருக்கும் என்கிறார்கள். மத்திய அரசு அளித்த நிதி எவ்வளவு? அதில் மருத்துவ உபகரணங்கள் எவ்வளவுக்கு வாங்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தெளிவான அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.