1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Coimbatore MLA suffered with corona

கோவை அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா! இதுவரை 9 எம்.எல்.ஏக்கள் பாதிப்பு!

Tamilnadu
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஆளும்கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்களும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்பொது கோவை மாவட்ட தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அர்ச்சுனனின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது எம்.எல்.ஏ அம்மன் அர்சுனனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகதில் திமுக எம்.எல்.ஏக்கள் 4 பேருக்கும், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
உலக அளவில் மூன்றாவது இடத்தை நோக்கி இந்தியா! – 20 ஆயிரத்தை நெருங்கிய பலி