திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 ஜூலை 2020 (14:20 IST)

செல்லூர் ராஜு மனைவிக்குக் கொரோனா – அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு உச்சமாக 4000க்கு மேல் வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பெரிய பலன் ஒன்றும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்துள்ளன.