செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (09:10 IST)

இதுக்காவது நடவடிக்கை உண்டா? இல்லை வழக்கபோல வழக்கா? – விஜயபாஸ்கருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் வசதி குறைவாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை குறிப்பிட்டு சுகாதார அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.சென்னையில் கொரோனா பாதிப்புகள் 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு படுக்கை வசதி பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கள ஆய்வு செய்த தனியார் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “'மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன’ என்று சொல்லி வரும் விஜயபாஸ்கரின் முகத்திரையை சி.என்.என் செய்தி கிழிக்கிறது. 5 தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என அலைகழிக்கப்பட்டதைக் காட்டும் இச்செய்திக்கு அமைச்சரின் பதில் என்ன? - வழக்குதானா? பொய்களை நிறுத்தி மக்களைக் காக்கவும்!” என்று கூறியுள்ளார்.