திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (08:40 IST)

சென்னையில் முழுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் விளக்கம்!

தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் முழு முடக்கம் அமலுக்கு வர போவதாக வெளியான தகவல் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் “சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் வதந்தியே. அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை” என கூறியுள்ளார்.