1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (08:01 IST)

நீட் தேர்வு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு பரிசீலனை!

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சம்மந்தமாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா முழுவதும் நீட் எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கு பல இடங்களில் எதிர்ப்புக் கிளம்பியும் மத்திய அரசு பின்வாங்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. வசதி படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு நீட் கோச்சிங் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பது போல ஏழை மாணவர்களுக்கு எந்த வசதி வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 66 சதவீதம் பேர் இரண்டாவது முறை தேர்வெழுதியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்துள்ளன. இதனால் மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆலோசனை நட்த்தி வருகிறது. இது சம்மந்தமாக  நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு ஆய்வுகளை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில் 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகள் உருவாகும்.