புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (19:24 IST)

’தலைவர் இருக்க பயமேன்’: முக ஸ்டாலினின் முருகன் விளம்பரம்!

’தலைவர் இருக்க பயமேன்’: முக ஸ்டாலினின் முருகன் விளம்பரம்!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்துமத எதிர்ப்பு கொள்கையை கைவிட்ட திமுக திடீரென இந்துமத ஆதரவு நிலையை எடுத்துள்ளது என்றும் அதற்கு உதாரணமாக சமீபத்தில் முக ஸ்டாலின் கையில் வேலுடன் உள்ள ஒரு புகைப்படம் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
 
முருகனின் அவதாரம் ஆகவே அவர் காட்சி அளிப்பது போல் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நாளை கோவை மாவட்டத்திற்கு முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த நிலையில் கையில் வேலுடன் உள்ள முக ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒன்று கோவை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது
 
அந்த போஸ்டரில் ‘தலைவர் இருக்க பயமேன்’ என்ற முருகப்பெருமானின் பாணியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக ஸ்டாலினின் முருகன் விளம்பரம் வரும் தேர்தலில் எடுபடுமா? இந்துக்கள் வாக்கு திமுகவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்