வேல் எடுத்ததே உங்களை சூரசம்ஹாரம் பண்ணதான்! – அதிமுகவுக்கு துரைமுருகன் பதில்!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (14:57 IST)
தேர்தல் பரப்புரையின் போது மு.க.ஸ்டாலின் வேல் ஏந்திய சம்பவம் வைரலான நிலையில் இதுகுறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கையில் வேல் ஏந்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஸ்டாலின் தேர்தலுக்காக திடீர் பக்திமானாக மாறிவிட்டார் என்ற வகையில் பேசி வருகின்றன.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பதிலளித்து பேசிய திமுக பொது செயலாளர் துரைமுருகன் “மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்ததே இந்த தேர்தலில் அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யதான்” என கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் தனியாக பிரச்சாரம் தொடங்கியுள்ளதற்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :