ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 மே 2023 (14:36 IST)

என் படத்து ஹீரோ கத்தியால பேசணும் இல்லன்னா….? இயக்குனர் முத்தையாவைக் கலாய்த்த ஆர்யா!

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. சமீபத்தில் அவர் இயக்கிய விருமன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஆர்யாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்து முடிந்துள்ள நிலையில் படத்துக்கு ‘காதர்பாட்சா என்கிற முத்து ராமலிங்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஜூன் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆவதை ஒட்டி, இந்த படத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் பேசிய நாயகன் ஆர்யா “படத்தின் டப்பிங்கின் போது இயக்குனர் என்னிடம், என் படத்தின் ஹீரோ கத்தியால பேசணும் இல்லன்னா கத்தி பேசணும் எனக் கூறி டப்பிங்கில் கத்த வைத்துவிட்டார்” எனக் கூறி ஜாலியாகக் கலாய்த்துள்ளார்.