1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin opened Koyembedu and Vellacherry flyovers

வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை திறந்தார் முக ஸ்டாலின்!

வேளச்சேரி
சென்னையில் வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

 
தமிழக தலைநகரான சென்னை தொழில்துறை நகரமாகவும் இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையின் முக்கியமான பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது சென்னை கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு இதி ஒதுக்கப்பட்டு  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் தற்போது முடிந்துள்ளது. 
 
இதனால் தற்போது வரும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை கோயம்பேடு, வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பாலம் ஆகிய இரு புதிய மேம்பாலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி, சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.210 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 1 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலங்களில் முதல்வர் ஸ்டாலின் காரில் பயணம் மேற்கொண்டார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?