செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:49 IST)

கூட்டணியா? தனித்து போட்டியா? தேர்தல் அறிக்கையா? – நாளை மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளை சென்னை கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. மேலும் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பரப்புரை ஒன்றில் கையில் வேலுடன் நின்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பானது கூட்டணி குறித்ததா? மக்களுக்கான அறிவிப்பா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.