வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:37 IST)

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த என்ன வழி? முதல்வர் ஆலோசனை!

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

 
உலகம் முழுவதும் திரிபடைந்த கொரோனா வைரஸான் ஒமிக்ரானின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. அதேசமயம் ஆய்வாளர்கள் பலர் ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்றாலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறி வருகின்றனர்.
 
இந்தியாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பதிவானது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதில் குணமானவர்கள் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர். ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.