1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gaana singers arrested for abuse song

சிறுமிகள் குறித்து தவறாக சித்தரித்து பாடல்! – கானா பாடகர்கள் கைது!

Tamilnadu
திருவள்ளூரில் சிறுமிகளை தவறாக சித்தரித்து பாடல் பாடிய கானா பாடகர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை, அதை தொடர்ந்த தற்கொலை சம்பவங்களால் கடந்த சில மாதங்களாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் திருவள்ளூரில் கானா பாடகர்கள் இருவர் சிறுமிகளை பாலியல் ரீதியா தவறாக சித்தரித்து பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை பாடிய பாடகர்கள் குறித்து தகவல் தருமாறு திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பாடலை பாடிய கானா பாடகர் சரண் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சீனாவின் முக்கிய நகரில் முழு ஊரடங்கு: அதிர்ச்சியில் ஒரு கோடி மக்கள்!