1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:57 IST)

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினர்களுக்கு முதல்வரின் இரங்கல் கடிதம்!

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 13 வீரர்களின் குடுபத்தினர்களுக்கும் தனித்தனியாக இரங்கல் கடிதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அனுப்பி உள்ளார்
 
நேற்றுமுன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும் இதில் 13 பேர் மரணம் அடைந்தார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுக்கு துணை நிற்பார்கள் என்றும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து  மீண்டுவர பலத்தையும் தைரியத்தையும் நீங்கள் பெற வேண்டுமென விழைகிறேன் என்றும் அவர் அந்த இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.