திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (16:32 IST)

விமான விபத்து சம்மந்தமாக சர்ச்சை கருத்து…. மாரிதாஸ் கைது!

நேற்று குன்னூரில் நடந்த விமான விபத்தில் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

நேற்று நடந்த விமான விபத்தில் இந்தியாவின் முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பலியானது இந்திய மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் இந்த  விமான விபத்து சம்மந்தமாக அரசுக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டதாகவும் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாரிதாஸ் தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார்.

இதையடுத்து வேறு சில வழக்குகளிலும் சர்ச்சையானக் கருத்தை தெரிவித்த மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.