1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:49 IST)

அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்: டிடிவி தினகரன் கிண்டல்!

அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி வழியில் முக ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கிண்டலடித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நோய் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சொல்லும் அதே நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க அறிவுரை வழங்க வேண்டிய தமிழக முதலமைச்சரே தஞ்சாவூர் திருச்சி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்களை கூட்டி நிகழ்ச்சி நடத்துகிறார் 
 
இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களை உயிரை காப்பாற்ற வேண்டும். இது குறித்து நாங்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று டிடிவி தினகரன் பேட்டி ஒன்றில் கூறினார் மேலும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எதையெல்லாம் அவர் செய்தாரோ, அதையெல்லாம் தற்போது முக ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மு க ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என டிடிவி தினகரன் கேலியுடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது