திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (17:50 IST)

உதயநிதியால் பரவாத ஒமிக்ரான், எங்களால் மட்டும் பரவுமா? டிடிவி தினகரன் கேள்வி!

உதயநிதியால் பரவாத ஒமிக்ரான் வைரஸ் எங்களால் மட்டும் பரவுமா? என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சமீபத்தில் எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறிய நிலையில் கோவையில் ஏராளமான திமுக தொண்டர்கள் கூடிய உதயநிதியின் கூட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளனர். இதுகுறித்து டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது
 
 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான்  பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? 
 
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான்  பரவும் என்று  தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது  சொல்லி இருப்பார்களோ? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது; மக்களைப் பற்றி கவலையும்  கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.