செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (10:03 IST)

சென்னை 75வது சுதந்திர தின நினைவு தூண்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு!

இன்று நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் நினைவு தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் இன்று நாட்டு மக்களால் விமரிசியாக கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் சென்னையில் மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தினத்தை நினைவுப்படுத்தும் நினைவுத்தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார், அந்த தூணின் உச்சியில் அசோக சக்கரமும், அதை கீழே நான்கு சிங்கங்கள் தாங்கி கொண்டிருப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.