செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (09:55 IST)

என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க!? – வைரலாகும் எய்ம்ஸ் பிரிக்ஸ் லாரி!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாதது குறித்து கிண்டல் மீம்கள் வைரலாகும் நிலையில் லாரி ஒன்றிற்கு “எய்ம்ஸ் ப்ரிக்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மதுரையில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்காக நிலமும் ஒதுக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இறுதிக்கட்ட பணிகளை எட்டிவிட்ட நிலையில் மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் பூமி பூஜையில் நட்டு வைத்த செங்கலோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று எய்ம்ஸ் மருத்துவமனை என காட்டி பிரச்சாரம் செய்தது தேர்தல் சமயத்தில் வைரலானது.

இந்நிலையில் செங்கல் சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்று தனது லாரிக்கு “எய்ம்ஸ் ப்ரிக்ஸ்” என்றே பெயரிட்டுள்ளது. செங்கல் இறக்கும் லாரிக்கு “எய்ம்ஸ் ப்ரிக்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.