1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin Gave way to OPS Car

ஓபிஎஸ்-ஐ பார்த்து ஓரம்கட்டிய ஸ்டாலின்!

ஓபிஎஸ்-ஐ பார்த்து ஓரம்கட்டிய ஸ்டாலின்!

ஓபிஎஸ்
இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது காரில் வந்துகொண்டு இருந்தார். அப்போது முதல்வரின் கான்வாய் வருவதைப் பார்த்து உடனடியாக தனது காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி முதல்வர் கான்வாய்க்கு வழிவிட்ட சம்பவம் நடந்தது.


 
 
கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று தொடங்கியது. இதில் கலந்துகொள்ள இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது காரில் வந்துகொண்டிருந்தார்.
 
தலைமைச் செயலகம் அருகேயுள்ள போர் நினைவுச் சின்னம் ரவுண்டானாவில் மு.க.ஸ்டாலினின் கார் வந்து கொண்டிருந்தபோது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கான்வாய் பின்னால் வந்தது கொண்டிருந்தது.
 
இதனை திடீரென பார்த்த மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது காரை சாலையின் அருகில் ஓரத்தில் நிறுத்திவிட்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கான்வாய்க்கு வழிவிட்டார். அவரது கான்வாய் சென்ற பின்னரே மு.க.ஸ்டாலினின் கார் புறப்பட்டுச் சென்றது.
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டாரா?: முன்னாள் எம்.பி. தகவல்!