1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (18:51 IST)

ஜெயலலிதா ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டாரா?: முன்னாள் எம்.பி. தகவல்!

ஜெயலலிதா ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டாரா?: முன்னாள் எம்.பி. தகவல்!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆர். இறந்த போது அவரது ராமாவரம் தோட்டத்தில் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் கூறியுள்ளார்.


 
 
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுகவில் ஒரு பிரிவினர் விரும்பவில்லை. அவர்கள் சசிகலாவின் குடும்பத்தினரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதில் அதிகமாக விமர்சிக்கப்படுவது நடராஜுனும், திவாகரனும் தான்.
 
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நடராஜன், திவாகரன் உள்ளிட்ட சசிகலாவின் குடும்பத்தினரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இவருக்கு பதிலளிக்கும்க் விதமாக பலரையும் இறக்கிவிட்டது அதிமுக தரப்பு. அவர்கள் சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்தனர் உள்ளிட்ட பல தகவல்களை கூறிவருகின்றனர்.
 
இந்நிலையில் முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர் கூறும்போது எம்.ஜி.ஆர். மறைவுச் செய்தி கேட்டு, ராமாவரம் தோட்டத்தில் ஜெயலலிதா ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டார் என கூறினார். மேலும் பூட்டி வைக்கப்பட்ட ஜெயலலிதாவை அந்த அறையை உடைத்து மீட்டவர் தினகரன் தான் என கூறியுள்ளார்.