திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:56 IST)

வருமான வரி அதிகாரிகளே கூட சீட் கிடைக்கும்னு சொன்னாங்க! – ஐடி ரெய்டு குறித்து மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது குறித்து இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டிலும் ஐடி ரெய்டு நடைபெற்றது.

இந்நிலையில் இன்று உதயநிதிக்கு ஆதரவாக சேப்பாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் பேசும்போது “என் மகள் வீட்டிற்கு வருமானவரி சோதனைக்கு வந்த அதிகாரிகள் காலை முதல் இரவு வரை டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள், உணவு சாப்பிட்டார்கள். சோதனைக்கு பின் 25 சீட் அதிகமாக கிடைக்கும் என கூறிவிட்டு சென்றார்கள்” என தெரிவித்துள்ளார்.