நீட் அனிதா அதிமுகவுக்கு அதரவாக பேசுவது போல டப்பிங்! – மாபா பாண்டியராஜனுக்கு கண்டனம்!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (10:22 IST)
நீட் தேர்வு பிரச்சினையில் உயிரிழந்த அனிதா அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவது போல அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அனைத்து விதமாகவும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பேசுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அனிதா அதிமுகவிற்கு ஆதரவாக பேசுவது போல டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மற்ற கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன் இதுகுறித்து மாஃபா பாண்டியராஜன் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :