வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 மே 2021 (11:40 IST)

இளைஞரை கன்னத்தில் அறைந்த கலெக்டர் பொறுப்பில் இருந்து நீக்கம்!

இளைஞரை கன்னத்தில் அறைந்த கலெக்டர் பொறுப்பில் இருந்து நீக்கம்!
ஊரடங்கு மீறி வெளியே வந்த இளைஞர் ஒருவரை மாவட்ட கலெக்டர் கன்னத்தில் அறைந்த நிலையில் அந்த கலெக்டர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு விதிமுறையை மீறிய இளைஞர் ஒருவர் வெளியே வந்து உள்ளார். அவரை கண்டித்த மாவட்ட கலெக்டர் ரன்வீர் சிங் என்பவர், ஒரு கட்டத்தில் அந்த இளைஞரின் கன்னத்தில் அடித்து உள்ளார். அது மட்டுமன்று அவரது செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்துள்ளார். கலெக்டரை அடுத்து காவலர்களும் அந்த இளைஞரை சரமாரியாக அடித்துள்ளனர் 
 
இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட கலெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனங்கள் குவிந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இளைஞரை கன்னத்தில் அறைந்த ரன்வீர்சிங், மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை என்று பலர் கமென்ட் அடித்த நிலையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.