வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (13:44 IST)

அரக்கோணம் இரட்டைக் கொலை - மு.க.ஸ்டாலின் கண்டனம் !

அரக்கோணம் இரட்டைக் கொலை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கட்சி தொடர்பான வாக்குவாதம் ஒன்றின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த அர்ஜுன் மற்றும் சூர்யா என்ற இளைஞர்களை குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த காவல்துறை இதுவரை 5 பேரை கைது செய்துள்ளது.
 
இந்நிலையில் இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இருவரையும் இழந்து தவிப்போருக்கு ஆறுதல்.
 
சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.