திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  3. தேர்தல் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:33 IST)

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக கோரிக்கை

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்துள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன. மேலும் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் அரசியல் கட்சியினரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்துள்ளது.